பாஜகவில் சேர்ந்து பல மாதங்களான நிலையில் தனக்கு இன்னும் எந்த பொறுப்பும் கொடுக்கப்படவில்லை என்ற ஆதங்கத்தையும் பாஜக கூட்டத்தில் விஜயதாரணி முன் வைத்திருந்தார். பாஜகவுக்கு போய் பதவியும் இல்லாமல் ஏற்கெனவே காங்கிரஸ் இருந்த பதவியும் போய் எம்எல்ஏ அந்தஸ்தும் போய் விஜயதாரணி நிராதரவற்று நிற்பதாக விமர்சனங்கள் எழுந்தன. மேலும் அவர் விரைவில் காங்கிரஸுக்கே திரும்பி வந்துவிடுவார் என்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் விஜயதாரணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் விஜய் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில், விஜய்யை எதிர்க்க வேண்டிய நிர்பந்தம் சில அரசியல் கட்சிகளுக்கு இருக்கிறது. விஜய் வரும் தேர்தலில் சரியான கூட்டணி அமைத்தால் ஆட்சியில் அமரும் வாய்ப்பு கூட கிடைக்கலாம்.
vijayadharani-assures-that-vijay-may-have-chances-to-form-a-government
Related Posts
- Comments
- Facebook Comments
- Disqus Comments