விஜயை அவன் ஒரு கூத்தாடி என்றெல்லாம் விமர்சனம் செய்ய ஆரம்பித்து விட்டனர்.
இதனால் கடுப்பாகிய விஜயை வைத்து திருப்பாச்சி, சிவகாசி படங்களை இயக்கிய இயக்குனர் பேரரசு கொந்தளித்துள்ளார். ஆமாம், நாங்கள் கூத்தாடி தான். நாங்கள் அதை பெருமையாக சொல்வோம், கலைஞர் ஒரு கூத்தாடிதான். எம்ஜிஆர் ஒரு கூத்தாடிதான்.
அதில் எங்களுக்கு ஒன்றும் குறை இல்லை. நல்லதை நாங்கள்தான் சினிமாவில் சொல்கிறோம். அரசியலில் இருந்து சினிமாவுக்கு வந்து நடிக்கலாம், ஒரு நடிகர் அரசியலுக்கு வரக்கூடாதா என்று கடுமையாக சாடினார்.
விஜய்க்கு ஆதரவுக் குரல் பெருகிக்கொண்டே போகிறது. தைரியமான பேரரசுக்கு வாழ்த்துக்கள் என்று நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.