தாடி பாலாஜி, “தவெக தலைவர் விஜய் என்ன முடிவெடிக்கிறாரோ அதனை ஏற்று செயல்படுவோம். அம்பேத்கரை அவமரியாதையாக பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது பற்றி தவெக தலைவர் விஜய் முடிவெடுக்கவில்லை. அவர் முடிவு எடுத்தால் நாங்கள் செய்வதற்கு தயாராக இருப்போம். அவர் சைலண்டா ஒரு விஷயம் சொன்னால் பயங்கரமாக வெடிக்கிறதே. விஜய் பேச வேண்டிய இடத்தில் கரெக்ட்டாக பேசுவார்.” என்றார். தவெகவில் நிர்வாகிகள் இடையே உட்கட்சி பிரச்சனைகள் ஏற்படுவது பற்றிப் பேசிய பாலாஜி, “தவெக கட்சித் தொண்டர்கள் தனித்தனியாக இல்லாமல் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். எல்லோருக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கைகள் இணைந்தால் வலுப்பெறுவது போல் தொண்டர்கள் பிரிவினை இல்லாமல் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.” என்றார்.
Related Posts
- Comments
- Facebook Comments
- Disqus Comments